குட்டியூண்டு குவாண்டத்திற்குள் சிக்கிய சூப்பர்ஹீரோ ஃபேமிலி! - Quantumania Trailer!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:41 IST)
மார்வெல் சூப்பர்ஹீரோவான ஆண்ட்மேனின் குவாண்டமேனியா ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். முன்னதாக ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், தோர் படங்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ் நவம்பர் 11ம் தேதி ப்ளாக் பாந்தர்; வகாண்டா ஃபாரெவர் படத்தை வெளியிடுகிறது.

அதை தொடர்ந்து அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ள படம் ஆண்ட்மேன் அண்ட் வாஸ்ப்; குவாண்டமேனியா (Antman and Wasp: Quantumania). சூப்பர்ஹீரோவான ஆண்ட்மேன் ஸ்காட் லாங் மற்றும் அவனது மகள் கேட்டி ஆகியோர் குவாண்டம் ரியல்மில் சிக்கிக் கொள்ள முன்னாள் ஆண்ட்மேனான பைம் மற்றும் அவனது குடும்பத்தினரும் அவர்களை மீட்க குவாண்டமிற்குள் நுழைய அங்கே ஏற்கனவே பலர் வாழ்ந்து வருவது தெரிய வருகிறது.

ALSO READ: வாரிசு தமிழ் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அங்குதான் கதையின் வில்லனான காங் தோன்றுகிறான். அவனை அவர்கள் முறியடித்தார்களா? குவாண்டமின் ரகசியங்களை கண்டறிந்தார்களா? என்பது சுவாரஸ்யமான படம். படத்தின் ஆங்கில ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், இந்திய மொழி ட்ரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments