Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவராத்திரி மூன்றாம் நாளில் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன...?

Advertiesment
Navratri - Third Day
, புதன், 28 செப்டம்பர் 2022 (10:32 IST)
பூஜிக்க வேண்டிய முறை: தாம்பாளத்தில் எட்டிதழ் தாமரைக் கோலமிட்டு நடுவிலும், இதழ்களிலுமாக ஒன்பது தீபங்கள் ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தின்யை நமஹ... என்று அர்ச்சனை செய்யவும்.


வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

மூன்றாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

மாதர்மே மதுகைடபக்னி
மஹிஷ ப்ராணாபஹாரோத்யமே|
ஹேலாநிர்மித துாம்ரலோசன
வதே ஹே சண்டமுண்டார்த்தினி|
நிஸ்ஸேஷீக்ருத ரக்தபீஜ தநுஜே
நித்யே நிசும்பாபஹே|
சும்பத்வம்சினி ஸம்ஹராசு
துரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே||

பொருள்: ஹே மஹிஷாசுர மர்த்தினி தாயே! மதுகைடபன், துாம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன் மற்றும் நிசும்பன் போன்ற கொடிய அரக்கர்களை அழித்த உன் ஆற்றல், எங்கள் துன்பங்களை சீக்கிரம் நீக்கி, இன்பம் அருள வேண்டுகிறோம். பூஜை நேரம் : மாலை 5:00 முதல் இரவு 7:00 வரையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரக்க குணம் கொண்ட மகிஷனை அம்பிகை ஆட்கொண்டது எங்கனம்...?