Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபடவேண்டிய அம்பிகை எது தெரியுமா...?

third day of Navratri
, புதன், 28 செப்டம்பர் 2022 (09:31 IST)
மூன்றாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக வழிபட வேண்டும். மூன்றாம் நாள் மகிஷாசுர வதம் செய்த தேவி சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலைமீது வீற்றிருக்கும் கோலத்தில், கல்யாணி வடிவமாக அலங்கரிப்பார்கள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.


நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்தரகாந்தாவாக வழிபடுவார்கள். சந்திரகாந்தா பத்து கைகளை உடையவராக காட்சியளிக்கிறார். அவற்றில், திரிசூலம், கதை, தண்டாயுதம், வில், அம்பு,  வாள், தாமரை மலர், மணி மற்றும் கமண்டலம் ஆகியவற்னற தன் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார்.

எஞ்சியுள்ள ஒரு கையை ஆசீர்வதிக்கும் தோரணை அல்லது அபயமுத்ராவில் வைத்திருக்கிறார். இவர், ஒரு புலி அல்லது சிங்கத்தின் மீது சவாரி செய்பவராக இருக்கிறார். இது, துணிச்சலையும் தைரியத்தையும் குறிக்கிறது, மேலும், இவரது நெற்றியில் பிறை நிலவை அணிந்துகொண்டு, நெற்றியின் நடுவில் மூன்றாவது கண் வைத்திருக்கிறார்.

நவ கன்னிகையாக வழிபடும் போது மூன்றாம் நாளில் 4 வயதுக் குழந்தை கல்யாணியாக வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

அறிவுக்கு ஆற்றல் தரும் நவராத்திரி மூன்றாம் நாள். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது மனநிம்மதியும், மகிழ்ச்சியும் தான். இவையில்லாமல், வேறு எவ்வளவு சிறப்புகள் நம்மிடம் இருந்தாலும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடையாது. நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவற்றை தருவது எது எனக் கேட்டால், மனித அறிவு தான் என்கின்றன சாஸ்திரங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (28-09-2022)!