ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில், வரும் பத்தாம் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் அதிகாலை 4:30 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான தரிசன கட்டணம் ரூ.500 என்று, இந்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1500 பேருக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும், முன்னுரிமை அடிப்படையில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்றும், சொர்க்கவாசல் நிகழ்வுக்கு பிறகு தரிசன நிகழ்வுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், மூன்று துணை கமிஷனர்கள் உள்பட 600 போலீசார், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.