Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளையார்கோவில் சோமேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா.. கொடியேற்றம் எப்போது?

Mahendran
செவ்வாய், 27 மே 2025 (18:30 IST)
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காளையார்கோவிலில் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா, மே 31ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது.
 
திருவிழாவையொட்டி, மே 30 அன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெறும். தொடக்க நாளான 31ஆம் தேதி இரவில் சுவாமியும், அம்பாளும் காமதேனு மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.
 
10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை புறப்பாடு மற்றும் இரவு 7 மணிக்கு வாகன வீதியுலா நடைபெறும். வெள்ளி, கிளி, யானை, சிம்மம், குதிரை போன்ற வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் உலா வருவார்கள்.
 
ஜூன் 4 அன்று திருக்கல்யாண வைபவம், 6ஆம் தேதி ருத்ர நீராட்டம், 7ஆம் தேதி நடராஜர் அபிஷேகம் நடைபெறும். ஜூன் 8 காலை 4 மணி முதல் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேரோட்டம் நடைபெற, பின்னர் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள்.
 
இவ்விழா ஜூன் 9ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் சிறப்பாக நிறைவடைகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்! ராசிபலன்கள், பரிகாரங்கள்! – தனுசு

நாளை ஆடி மாதம் முதல் தேதி: அம்மன் அருளை பெற சிறப்பு வழிபாடுகள்!

அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்! ராசிபலன்கள், பரிகாரங்கள்! – கன்னி

அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்! ராசிபலன்கள், பரிகாரங்கள்! – சிம்மம்

அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்! ராசிபலன்கள், பரிகாரங்கள்! – கடகம்

அடுத்த கட்டுரையில்
Show comments