இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ள நிலையில் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இந்த சந்திர கிரகணத்தை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சந்திர கிரகணத்தின்போது பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அஸ்வினி பரணி கிருத்திகை பூரம் பூராடம் ஆகிய நட்சத்திர சேர்ந்தவர்கள் நாளை பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக அரிசி, உளுந்து, தேங்காய் வெற்றிலை பாக்கு பழம் ஆகியவை தானம் செய்யவேண்டும் என்றும் கூறப்படுகிறது
மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் குளித்து சந்திரதரிசனம் செய்த பின் உணவுகளை தானம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் பரிகாரம் செய்யவேண்டியது அவசியம் இல்லை என்றும் விருப்பமுள்ளவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்து வருகின்றனர்
இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2.39 மணி அளவில் சந்திர கிரகணம் தொடங்கி மாலை 5. 12 மணி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது