திருக்குறளில் உள்ள ஆன்மீகத்தை யாரும் கூறுவதில்லை என தமிழக கவர்னர் ஆர் என் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசிய போது திருக்குறள் என்பது ஆன்மீகமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒரு புத்தகம் என்றும் நமது பாரத நாட்டின் பெருமைக்குரிய புத்தகம் என்றும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய நூல்தான் திருக்குறள் என்றும் தெரிவித்துள்ளார்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் சரியாக மொழி பெயர்க்க வில்லை என்றும் ஆதிபகவன் என்றால் கடவுள் என்று நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் மொழிபெயர்த்தபோது தவறாக மொழிபெயர்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
திருக்குறலாள் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை என்றும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் திருக்குறளை ஆன்மீகத்தின் வடிவமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்