ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

Mahendran
புதன், 6 ஆகஸ்ட் 2025 (18:15 IST)
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள மலையை, பக்தர்கள் சிவபெருமானாக வழிபடுகின்றனர். இந்த அண்ணாமலை மலையை சுற்றி, 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப் பாதையில், ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
 
இந்த முறை, ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஆகஸ்ட் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.43 மணி முதல், ஆகஸ்ட் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் 2.18 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்த பௌர்ணமியன்று, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 பக்தர்களின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வேலை முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (19.10.2025)!

இந்த கோவிலுக்கு போனால் நோயே வராது.. நீண்ட ஆயுள் கிடைக்கும்..!

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (17.10.2025)!

தீபாவளி 2025: செல்வம் பெருக லட்சுமி குபேர பூஜைக்கான உகந்த நேரம்

அடுத்த கட்டுரையில்
Show comments