திருநாங்கூர் ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில் சிறப்புகள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டம் திருவாங்கூர் வைகுண்ட சுவாமி கோயில் குறித்த சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்
இந்த கோயில் பரமபதத்திற்கு இணையானது என்றும் வைகுண்டத்தில் இருப்பது போன்று பெருமாள் இந்த கோவிலில் காட்சி தருவார் என்றும் புராணங்கள் கூறுகின்றன
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ஐராவதேஸ்வரரை வணங்கினால் அவருடைய அருள் கிடைக்கும் என்றும் அதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மை உண்டு என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்
வைகுண்ட விண்ணகரம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் சிவபெருமான் திருமாலிடம் வேண்டுகோள் விடுப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பூலோகத்தில் நாம் வாழும் காலத்திலேயே வைகுண்டநாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இந்த கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டுமென்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதேசி மற்றும் நவராத்திரி விழாவின்போது சிறப்பு அலங்காரம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது