Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே உடலில் ராகு-கேது.. இந்த கோவிலுக்கு சென்றால் 100 வயது வரை வாழலாம்..!

Advertiesment
Sri Vanchiyam Temple

Mahendran

, செவ்வாய், 5 நவம்பர் 2024 (18:30 IST)
ராகுவும் கேதுவும் ஒரே உடலுடன் இருக்கும் ஸ்ரீவாஞ்சியம் கோயிலுக்கு சென்றால் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 
 
எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், அதை அனுபவிக்க நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவாஞ்சியம் கோயிலுக்கு சென்று வருகின்றனர். 
 
இந்த கோவிலுக்கு சென்று வாஞ்சிநாதனை தரிசித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் உள்ள சிறப்பு ராகு கேது தனித்தனியாக இல்லாமல் ஒரே உடலுடன் திகழ்கிறார்கள். மேலும், சிரஞ்சீவி தன்மை கொண்ட இந்த இருவரும் இங்கே ஈசன் அருளால் இருப்பதால், அவர்களை வணங்கினால் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள், அதே நாளில் சிதலபதி ஆதி விநாயகர் கோவிலுக்கும், லலிதாம்பிகை கோவிலுக்கும் சென்று வணங்க வேண்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(04.11.2024)!