மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் வரும் ஐந்தாம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதி அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அந்த பகுதி மக்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. 
	 
	சிவன் பார்வதி திருமணம் இமயமலையில் நடந்த போது அந்த திருமணத்திற்கு காண்பதற்கு  முனிவர்கல், தேவர்கள் குவிந்தனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது
	 
	இதனை அடுத்து சமநிலையை அடைய அகத்தியர் தென்பகுதிக்கு வந்தார். அந்த இடம்தான் தோரணமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் வரும் ஐந்தாம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்