Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா..

Advertiesment
Thai Pusam

Mahendran

, செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (18:30 IST)
தமிழ்நாட்டில் தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது பெரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்
 
இந்த நிலையில்  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
 
திருப்பரங்குன்றம்சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும்.
 
திருச்செந்தூர் அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும்.
 
பழனிமாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம் ஆகும்.
 
சுவாமிமலைதன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தந்த திருத்தலம் ஆகும்.
 
திருத்தணிசூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம். 
பழமுதிர்சோலைஅவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (04.02.2025)!