Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்!

Srivanjiyam Temple

Prasanth Karthick

, புதன், 10 ஜனவரி 2024 (08:39 IST)
பாவ விருத்தி அளிக்கும் திருத்தலங்களில் பல கால பெருமையும், தொன்மையும் கொண்டதாக விளங்குகிறது ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்.



காவிரிக் கரையை ஒட்டிய தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் 70வது திருத்தலமாக ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோவில் திகழ்கிறது. சைவ அடியார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற இந்த ஸ்தலம் சோழ, பாண்டிய, நாயக்க அரசர்களால் வணங்கி போற்றப்பட்ட திருத்தலமும் ஆகும்.

இந்த தலத்தின் மிக சிறப்பான விஷயம் ஸ்தலத்தின் ஷேத்ர பாலகனாக எமபெருமான் விளங்குவதுதான். இதற்கு புராண கதையும் உள்ளது. உலக உயிர்களை கவர்ந்து செல்லும் எமபெருமான் அதனால் ஏற்படும் பாவங்களால் நிலைகுலைந்து சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் அவரை திருவாஞ்சியம் தலத்தில் தவம் மேற்கொண்டு பூஜிக்க அருள்கிறார். அதன்படியே எமபெருமான் திருவாஞ்சியத்தில் கடும் தவம் புரிந்து தனது பாவங்களை அழித்து சிவபெருமானின் அருள் பெற்றார்.


இதனால் இத்திருத்தலத்தில் ஷேத்ர பாலகனாக அருளும் எமபெருமானை வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்க செல்கின்றனர். இங்கு வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பை இல்லாமல் செய்து அமைதியான இறுதிகால முக்தியை எமபெருமான் வழங்குவார் என்பது ஐதீகம்.

இத்தலத்து தீர்த்தம் குப்த கங்கை என அழைக்கப்படுகிறது. இத்தீர்த்ததில் நீராடுவதன் மூலம் ஏழு ஜென்ம பாவங்களில் இருந்தும் விடுபட்டு முக்தியை அடைய முடியும்.

கோவில் கருவறையில் லிங்க வடிவில் வாஞ்சிநாதர் காட்சியளிக்கிறார். கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மர், துர்க்கை சிற்பங்கள் காணப்படுகின்றன. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்! – இன்றைய ராசி பலன்கள்(10.01.2024)!