Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா..! அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்...!!

Advertiesment
temple annamalai

Senthil Velan

, சனி, 6 ஜனவரி 2024 (15:39 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்  உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த முக்கிய திருவிழாக்களில் ஒன்று உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்று விழா. 

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும் தை மாதம் முதல் ஆனிமாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும் தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும் வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணியகாலம் என்றும் அழைப்பார்கள்.  
ALSO READ: போதை ஊசி செலுத்திய இளைஞர் திடீர் மரணம்..! சென்னையில் அதிகரிக்கும் போதை கலாச்சாரம்..!!
 
அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சந்நதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சந்நதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம். 
 
அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.  அதன் பின்னர் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரம் அருகே விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார் சந்நதியில் உள்ள 64 அடி உயர தங்கக் கொடி மரத்தில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடைபெற்றது. 
 
இந்த பிரம்மோற்சவ கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் திரளாக கூடியிருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை மாலை என இருவேலைகளிலும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 
 
இதனையடுத்து 10 ஆம் நாளான தை மாதம் முதல் தேதி ஜனவரி 15 ஆம் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரியோடு இவ்விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு செலவு அதிகரிக்கலாம்! – இன்றைய ராசி பலன்கள்(06.01.2024)!