Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கஜேந்திர மோட்சம்.. சிறப்பான ஏற்பாடுகள்

Mahendran
வியாழன், 8 மே 2025 (18:11 IST)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள்  விழா, வெளிக்கோடை மற்றும் உள்கோடை என்ற இரண்டு பரிபாட்டுகளில், ஒவ்வொன்றும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான விழா, கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
 
விழாவின் முன்னோட்டமாக, மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கோவிலின் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். இரவு 7 மணிக்கு அவர் வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு பக்தர்களுக்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர், இரவு 8.30 மணிக்கு அவர் அங்கு இருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்குத் திரும்பி மூலஸ்தானத்திற்கு சென்றடைந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
 
இதன் பின்னர், நம்பெருமாள் உள்கோடை திருநாள் விழா தொடங்கியது. இந்த விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். 10-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவை நடைபெறுகிறது. 12-ந்தேதி, சித்ரா பவுணர்மி அன்று, கஜேந்திரமோட்ச புறப்பாடு ஏற்படும். அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில், காவிரி ஆற்றின் படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவம் விழா.. இன்று கொடியேற்றம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உழைப்பு ஏற்ற நற்பெயர் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (03.05.2025)!

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்! குவியப்போகும் பக்தர்கள்! - சிறப்பு பேருந்துகள், ஏற்பாடுகள் தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments