உலகில் பல வகை புற்கள் இருந்தாலும், வழிபாடுகளுக்கு தர்ப்பை புல் மட்டுமே ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஆன்மீகக் காரணங்கள் உள்ளன. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.
வேதங்களின்படி, தர்ப்பை புல் ஆகாயத்திலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. இதன் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே, இது 'தெய்வப் புல்' என அழைக்கப்படுகிறது.
நிலத்தில் வாடாமலும், நீரில் அழுகாமலும், விதை, செடி அல்லது பதியம் இல்லாமல் தானே வளர்வது இதன் தனிச்சிறப்பு. தர்ப்பை புல்லுக்கு வெப்பத்தை ஈர்க்கும் தன்மை அதிகம். குறிப்பாக, அமாவாசை மற்றும் கிரகண காலங்களில் இதன் ஆற்றல் அதிகமாக இருப்பதால், தர்ப்பணம் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
எனவே ஆன்மீக ரீதியாக மிக உயர்ந்த முக்கியத்துவம் கொண்டவையாக தர்ப்பை புல் கருதப்பட்டு, வழிபாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.