Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்மீகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள்

Advertiesment
ஆன்மீகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள்
, வியாழன், 10 ஜனவரி 2019 (14:21 IST)
ஆன்மீகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.



1. கோவிலில் தெய்வங்களை நேருக்குநேர் நின்றுகொண்டு வணங்கக் கூடாது. பக்கவாட்டில் நின்று கொண்டுதான் வணங்க வேண்டும்.

2. ஆலயங்களில் ஒருவர் ஏற்றியிருக்கும் விளக்கில் இருந்து நெருப்பு எடுத்து தீபம் ஏற்றக்கூடாது. புதிதாக நெருப்பைக் கொண்டே தீபம் ஏற்ற வேண்டும். இல்லை என்றால் ஆலயத்தின் விளக்கில் இருந்து ஏற்றலாம்.

3. கஸ்தூரிமஞ்சள், பச்சைக் கற்பூரம், ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளிக்க வீட்டில் நல்ல சக்தி உண்டாகும். அதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய் கொண்டு திருஷ்டியும் கழிக்க கெட்ட சக்திகள் அகன்று நல்ல சக்தி உண்டாகும்.

4. கோவிலுக்கு செல்லும்போது கையில் ஏதேனும் ஒன்றை பூஜைக்காக எடுத்துச் செல்ல வேண்டும். வெறுங்கையுடன் சென்றால் வெறுங்கையுடன் திரும்ப நேரிடும்.

5. கோவிலில் அர்ச்சகர் தரும் குங்குமம், மஞ்சள், சந்தனம், விபூதி, பூ போன்ற பொருள்களை (பிரசாதங்களை) கோவிலிலேயே கொட்டி விடுவார்கள், இது தவறு.

6. செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டினால் கெட்ட சக்திகள் வீட்டிற்க்குள் வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடும் காரணம்