Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லி மரத்தை வளர்த்து கஷ்டத்திலிருந்து விமோசனம் பெற்ற குபேரன்!

Advertiesment
நெல்லி மரத்தை வளர்த்து கஷ்டத்திலிருந்து விமோசனம் பெற்ற குபேரன்!
செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று சொல்வார்கள். குபேரன் பணக்காரன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த குபேரனுக்கே கஷ்டம் வந்தபோது நெல்லி மரங்களை தான் வளர்த்து வந்தார்.
 

போர் ஏற்பட்டு நாடு நகரங்களையெல்லாம் இழந்த குபேரன் வேறு வழியில்லாமல் சிவ  பெருமானிடம் முறையிட சிவபெருமானோ நீ நிறைய நெல்லி மரங்களை வளர்த்து விட்டு என்னை வந்து பார் என்றார்.
 
குபேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சொன்னது சிவபெருமானாச்சே!  அதனால் ஆயிரக்கனக்கான நெல்லி மரங்களை வளர்த்து  வந்தார் குபேரன்.  நெல்லி மரம் பூ பூத்தது. பூவெல்லாம் காய் ஆகின, காய்களெல்லாம் பழம் ஆனது. குபேரனை எதிர்த்த அரசன் கூட ஓடி  வந்து கப்பம் கட்டினான் செல்வம் பெருகியது, நாடு நகரமெல்லாம் திரும்ப கிடைத்தது.
 
சிவபெருமானிடம் சென்றான் குபேரன், எனக்கு ஒன்றும் புரியவில்லை நெல்லி மரம் வளர நானும் உயர்ந்தேன் இது என்ன விந்தை என்று கேட்க! சிவபெருமான் சொன்னார் நீ வைத்தது மரங்கள் அல்ல. லட்சுமி தேவிகள் தினமும் தண்ணீர் ஊற்றி லட்சுமி தேவியின் அருள்  பெற்றாய் அதோடு நீ செய்த பாவங்களும் தீர்ந்தது.
 
நெல்லி மரம் லட்சுமி தேவியின் சொரூபம் என்றார், ஆகவேதான் லட்சுமி தேவியின் அருள் பெற்றாய் நீ என்றார் இதை கேட்ட குபேரனும்  நெல்லி மரத்தை வணங்கி விடைபெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் வெண் கடுகு...!!