Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகனை போலவே அய்யப்பனுக்கும் அறுபடை வீடுகள்.. முழு விவரங்கள்..!

Advertiesment
முருகனை போலவே அய்யப்பனுக்கும் அறுபடை வீடுகள்.. முழு விவரங்கள்..!

Mahendran

, புதன், 13 நவம்பர் 2024 (18:55 IST)
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளதைப் போல, அய்யப்பனுக்கும் 6 முக்கிய கோவில்கள் உள்ளன. அவற்றை "அய்யப்பனின் அறுபடை வீடுகள்" என்று அழைக்கலாம். அய்யப்பனின் அறுபடை வீடுகள் குறித்த தகவல்கள் இதோ:
 
1. சபரிமலை:  தர்மசாஸ்தாவான அய்யப்பன் பக்தர்களை யோக சின்முத்திரையுடன் அருள் வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.
 
2. எருமேலி:  இங்கு அய்யப்பன் வேட்டைக்கான கையிலுள்ள வில், அம்பு ஆகியவற்றுடன் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
 
3. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஊரில், அய்யப்பன் ராஜசுகமான நிலையில், ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார்.
 
4. அச்சன் கோவில்:  செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் பழமையானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு, வனராஜனாக அமர்ந்த அய்யப்பன், கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி தருகிறார். 
 
5. பந்தளம்: பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீருடனும் சிறப்புடனும் வளர்க்கப்பட்ட இடமாகும். அந்த மன்னன் கட்டிய கோவில் இங்கு காணப்படுகிறது. இங்கு அய்யப்பனுக்குரிய திரு ஆபரணங்களும் உள்ளன.
 
6. குளத்துப்புழா: செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ள இந்த கோவிலில், அய்யப்பன் குழந்தையாக இருக்கும் நிலையில் "பால சாஸ்தா" என அழைக்கப்படுகிறார். இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையக்கூடிய அளவுக்கு கட்டப்பட்டிருக்கிறது.
 
சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்கள், அய்யப்பன் அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால், சிறந்த பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!