Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

Advertiesment
ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

Prasanth Karthick

, புதன், 13 நவம்பர் 2024 (09:22 IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு புதிய மேல்சாந்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

 

 

சபரிமலையில் மகரவிளக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில் கார்த்திகை மாத தொடக்கத்தில் பக்தர்கள் பலரும் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது வழக்கம். ஒரு மண்டலம், அதாவது 41 நாட்கள் விரதத்திற்கு பிறகு சபரிமலைக்கு இருமுடிக் கட்டி சென்று ஐயப்பனை வழிபடுவார்கள்.

 

மகர விளக்கு சீசன் கார்த்திகை 1 (நவம்பர் 16) தொடங்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான சபரிமலை மேல்சாந்தியாக கொல்லம் அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லம் மகாலட்சுமி தேவி கோவில் மேல்சாந்தியாக சேவை செய்து வருகிறார்.
 

 

சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் அவர் “பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனை தரிசிக்க 41 நாட்கள் பிரம்மச்சர்ய விரதத்தை கடைப்பிடிப்பது சிறந்தது. 41 நாட்கள் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் பயபக்தியுடன் விரதம் மேற்கொள்ளலாம்.

 

விரதம் மேற்கொள்ளும் நாட்களில் வீட்டில் துக்க சம்பவங்கள் நடந்தால் சாமி தரிசனத்தை ஒத்தி வைக்க தேவையில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் மாலையை கழற்றிவிட்டு, மீண்டும் மாலையை முறைபடி அணிந்து விரதம் மேற்கொள்ளலாம். இதனால் தெய்வ கோபம், தீட்டு ஏற்படாது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் ஆட்சி.. நாட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு சலுகை: கப்பல் நிறுவனம் அறிவிப்பு..!