திருப்பதி திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடேச பெருமாளை தரிசிக்க, எண்ணற்ற பக்தர்கள் தினந்தோறும் கூடுகின்றனர். வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட வேண்டுமென மக்கள் அங்கு சென்று வழிபாடு செய்கிறார்கள்.
திருமலையின் சிறப்பை கூறும் ஏழு விஷயங்கள்:
ஏழுமலைகள் – கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி.
ஏழு பெயர்கள் – ஏழுமலையான், திருவேங்கடமுடையான், பாலாஜி, சீனிவாசன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், திருவேங்கடநாதன்.
ஏழு தீர்த்தங்கள் – குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், சுவாமி புஷ்கரணி
ஏழு தலைகள் – ஆதிசேஷனின் ஏழு தலைகளாகும் திருமலை.
ஏழு கலசங்கள் – கோபுரத்தில் அமைந்துள்ளவை.
ஏழு முக்கிய திவ்யதேசங்கள் – கோவிந்தராஜர், திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் உள்ளிட்ட முக்கியக் கோவில்கள்.
ஏழு மகிமைகள் – ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்திர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவை பெருமாளின் சிறப்பை உணர்த்துகின்றன.