சபரிமலைவாசன் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் முறையான அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்து புலியை வாகனமாக கொண்டு சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பனை விரதம் இருந்து வணங்கினால் பூரண அருள் கிடைக்கும். சுவாமி ஐயப்பனை “தர்ம சாஸ்தா” என்று அழைப்பது வழக்கம். சாஸ்தா என்றால் ஆள்பவன் என்று பொருள். தவறு செய்பவரை தண்டிப்பதும், கட்டளைகள் இடுவதும் ஆள்பவரின் அதிகாரம்.
யோக நிலையில அமர்ந்திருக்கும் சுவாமி ஐயப்பன் சாஸ்திரங்களை உபதேசித்து அதன்படி வாழ்பவர். அதனால்தான் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் அனைத்து வித அனுஷ்டானங்களையும் பயபக்தியுடன் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை உணர்த்தவே சபரிமலை 18ம் படியில் சுவர்க்கத்தை அளிக்கும் தத்வமஸி என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.
சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்:
கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
வரம் வாமஹஸ்தம் சஜாநூபரிஸ்தம்
வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
பஜே சம்பு விஷன்வோஸ் ஸஷுதம் பூதனாதம்
Edit by Prasanth.K