பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் தீராத துன்பங்கள் தீர்ந்துவிடும் என்றும் தீவினைகள் வேறறுக்கப்படும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதும் ராஜராஜ சோழன் இந்த பிள்ளையார்பட்டி விநாயகர் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பிள்ளையாரின் சிறப்பை உலகிற்கே எடுத்துக்காட்டும் அளவிற்கு இந்த கோயில் மிகவும் அற்புதமானது என்றும் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் வந்து பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்கினால் தீவினைகள் வேரறுக்கப்படும் என்றும் எந்த வித தீய வினைகள் பக்கத்தில் அண்டாது என்றும் நம்பிக்கையாக உள்ளது.
பிள்ளையார்பட்டி கோயில் காலை 07:30 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் சாமி தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது