நாளை பானு சப்தமி தினம் என்பதால் சூரிய பகவானை வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
சூரியனுக்கு உகந்த நாளான ஞாயிறு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி ஆகிய இரண்டும் ஒன்றாக வரும் நாள்தான் பானு சப்தமி என்று கூறப்படுகிறது
வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி ஆயிரம் சூரிய கிரகங்களுக்கு ஒப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் சூரியனை வணங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஐதீகமாக உள்ளது
எனவே நாளை விரதம் இருந்து பூஜைகள் மந்திரங்கள் ஒலித்து பலன்களை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நாளை காலையில் புண்ணிய நதிகளில் குறித்து சூரியனை வணங்கி மந்திரங்கள் சொன்னால் ஏழேழு ஜென்மத்துக்கும் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது