Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த கிழமையில் துர்க்கையை வழிபடுவது ??

Advertiesment
எந்த கிழமையில் துர்க்கையை வழிபடுவது ??
, புதன், 7 ஜூலை 2021 (23:41 IST)
துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும்.
 
துர்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவையே. 
 
ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து துர்க்கை சன்னதியில் விளக்கேற்ற வேண்டும்.
 
துயரங்கள் நீங்குவதில் முதன்மையானது துர்க்கை அம்மன் வழிபாடு. சிவப்பு வஸ்திரத்தை அம்பாளுக்கு சாத்தியும் வழிபடலாம்.
 
துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
 
ஸ்ரீ துர்க்கையின் வாகனம் சிம்மம். துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்தியம் வாசிக்கக் கூடாது.
 
துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர், ‘நீலோத் பலம்’. இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.
 
பகைவர்களை வேரறுப்பது மற்றும் தீவினைகளை போக்குவதில் துர்க்கை வழிபாடு சாலச் சிறந்தது.
 
நிவேத்யமாக சர்க்கரை பொங்கல் செய்யவேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கப் பெற்று, செல்வ வளம் பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் நெல்லிமரம் வைத்தால் செல்வ வளம் பெருகுமா...?