Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

Advertiesment
பாபநாசம்

Mahendran

, திங்கள், 5 மே 2025 (19:23 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
 
மஹா கும்பாபிஷேகத்திற்கு முன், ஏப். 27 முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டன. மே 1 ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள், மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வேறு கால யாக பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜையின் பிறகு, யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் பச்சைக் கொடியசைத்ததையடுத்து, உலகம்மை, பாபநாச சாமி விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
 
இந்த மஹா கும்பாபிஷேகத்துக்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின், 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
 
போலீசார், ஊர்க்காவல் படையினர் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்த கோவிலைப் பற்றி கூறும் ஐதீகம், பாபநாசம் சூரிய தலமாகவும், சிவன் மற்றும் பார்வதியின் திருமணம் நிகழ்ந்த இடமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!