மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (19:14 IST)
மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது கருதப்படுகிறது.
 
தங்கை மீனாட்சியின் திருமணத்திற்கு தாமதமாக வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் நீராடிவிட்டு திரும்பியதாக புராணங்கள் கூறுகின்றன. சுதபஸ் முனிவருக்கு விமோசனம் அளிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
 
10 நாள் விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் திருமாலிருஞ்சோலையில் இருந்து மதுரைக்கு எழுந்தருள்கிறார். பல்வேறு அலங்கார வாகனங்களில் ஊர்வலமாக வரும் கள்ளழகர், வைகை ஆற்றை அடைந்ததும், ஆற்றில் இறங்கி மக்களுக்கு அருள் பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை தரிசிக்கின்றனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தருணம் மிகவும் பக்தி மயமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
 
 
2024ஆம் ஆண்டின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரும் திங்கட்கிழமை பெளர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

திருப்பதியில் கோலாகலமாக நிறைவடையும் பிரம்மோற்சவ விழா: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்கள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (02.10.2025)!

இந்த ராசிக்காரர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (01.10.2025)!

அக்டோபர் மாத ராசிபலன்கள் 2025! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments