கள்ளழகர் திருவிழாவில் , மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கு ஆட்சியர் சங்கீதா விளக்க கடிதம் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கள்ளழகர் திருவிழாவில் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற மதுரை ஆட்சியரின் உத்தரவை மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக ரத்து செய்துள்ளது
கோவில் பாரம்பரிய நடைமுறைகளில் மாவட்ட ஆட்சியர் தான்தோன்றித்தனமாக உத்தரவு பிறப்பது ஏன் என நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர். மேலும் இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு பக்தர்களின் மனதை புண்படுத்துவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது
மேலும் மாவட்ட ஆட்சியர் கோயில் நிர்வாகத்திடமோ, சட்ட வல்லுனர்களிடமோ கேட்காமல் எவ்வாறு இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்கிறார் எனக்கேட்ட நீதிமன்றம், ஆட்சியர் சங்கீதா விளக்க கடிதம் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.