Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகரின் பல்வேறு உருவங்கள் பற்றி பார்ப்போம்...!!

Advertiesment
Lord Ganesha
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:25 IST)
விநாயகரின் பல்வேறு உருவங்களில், பெயர்களில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம். விநாயகரின் உருவங்கள் ‘ஷோடச கணபதி’ வகைகள் என்றும்,  ‘ஏக விம்சதி’ கணபதி வகை என பிரிக்கப்பட்டுள்ளன.


பால கணபதி: குழந்தை போன்ற உருவத்தில், செங்கதிர் நிறத்தில் காட்சி தரக்கூடியவர். இவர் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பலம், கரும்பு ஆகியவற்ற தன் நான்கு திருக்கரங்களில் தாங்கியவர்.

தருண கணபதி: சிவந்த திருமேனியை கொண்ட தருண கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், கரும்புத் துண்டு, நெற்கதிர்கள், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரங்களில் ஏந்தியவர்.

பக்தி கணபதி: வெள்ளை நிறத்தில் காணப்படும் பக்தி கணபதி, தனது நான்கு திருக்கரங்களில் பாயாசக் கிண்ணம், தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்திருப்பார்.

வீர கணபதி: சிவந்த திருமேனியுடன் காணப்படும் வீர கணபதி, தன்னுடைய 16 திருக்கரங்களில் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை திருக்கரங்களிலும் ஏந்தியிருப்பார்.

சக்தி கணபதி: அந்தி வானம் போல சிவந்த மேனியுடன் இருக்கும் சக்தி கணபதி, தன் மடியில் பச்சை நிறத்திலான தேவியை, ஒரு கையால் இருப்பில் தேவியை அனைத்திருப்பது போலவும், மற்ற கைகளில் அபய ஹஸ்தம் , பாசம், பூமாலை ஆகியவற்றை தாங்கியவர்.

துவிஜ கணபதி: வெண்மையான திருமேனியை உடைய துவிஜ கணபதி, நான்கு முகங்கள், புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் ஆகியவற்றை தன் கரங்களில் தாங்கியவர்.

சித்தி கணபதி: பொன் மற்றும் பசுமை நிறம் கலந்த சித்தி விநாயகர், தன் 4 திருக்கரங்களில் பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றையும், தன் துதிக்கையில் மோதகத்தை தாங்கி இருப்பார்.

உச்சிஷ்ட கணபதி; நீல நிறத்தில் காட்சி அளிக்கும் உச்சிஷ்ட கணபதி, தன் 6 திருக்கரங்களில் இரண்டில் நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தாங்கி இருப்பார். அதோடு தான் காம மோகிதராக, பெண்ணின் மேனியில் தன் துதிக்கையை வைத்து காணப்படுவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!