Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்வினை பாவங்கள் யாவையும் தீர்க்கும் பரிகாரம் பற்றி பார்ப்போம் !!

Advertiesment
Deepam
, வெள்ளி, 1 ஜூலை 2022 (16:47 IST)
ஒரு ஆன்மாவானது தனது கர்ம வினையை தீர்ப்பதற்கு பிறப்பு எடுக்கின்றது. அதிலும் குறிப்பாக மூன்று ஜென்ம கர்ம வினைகளே ஒரு மனிதனை மிகவும் துன்பப் படுத்துகின்றது. அவைகளை தீர்ப்பதற்கு முன்னோர்கள் சொன்ன பரிகாரம்.


தாமரை என்பது தெய்வீகமான மலர் அந்த தாமரைத்தண்டு செடியிலிருந்து எடுக்கப்படும் நூலினை திரியாக திரித்து வெள்ளிக்கிழமை சுத்தபத்தமாக காலையும் மாலையும் தூய பசு நெய் விட்டு அகல் விளக்கு ஏற்றி வரவேண்டும்.

இப்படியாக ஐந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்து வர வேண்டும். இந்த வழிபாடு செய்யும் பொழுது உணவு இல்லாதவர்களுக்கு உணவளிப்பது ஏதாவது பசியாக இருக்கும் உயிரினங்களுக்கு உணவளிப்பது குறிப்பாக பசுவுக்கு உணவு அளிப்பது மிகவும் நற்பலனைத் தரும்.

மகாலட்சுமி வாசம் செய்யும் தாமரைப் பூவில் இருந்து எடுக்கப்படும் தாமரைத் தண்டு திரியில் ஏற்றக்கூடிய தீபத்திற்கு, வறுமையை விரட்டி அழிக்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது.

தாமரைத் தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்து வந்தால், முன்வினைகள் யாவும் தீருவதோடு, நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். புகழும் கெளரவமும் கிடைத்து, பதவி உயர்வுடன் திகழலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்ன தெரியுமா...?