புரட்டாசி சனிக்கிழமைகளில் விரத முறைகளை தொடங்குவது எப்படி...?

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (14:41 IST)
புரட்டாசி சனியன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். பகலில் மதியம் மட்டும் எளிய உணவு உண்ண வேண்டும். காலை, இரவில் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
 


பகலில் விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் (108 போற்றி) படிக்க வேண்டும். பெருமாளுக்கு நைவேத்யமாக துளசி தீர்த்தம், இளநீர், தயிர்,பழங்கள் படைத்து வழிபட வேண்டும். இந்த விரதம் மேற்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். குறிப்பாக சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் அகலும். வறுமை நீங்கி செல்வவளம் பெருகும்.

இரவில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு நெய் தீபமும், சனீஸ்வரருக்கு எள்தீபமும் ஏற்றி வழிபட வேண்டும்.

மேலும் படிக்க:புரட்டாசி சனிக்கிழமைகளுக்கு மட்டும் இத்தனை சிறப்புகள் ஏன் தெரியுமா....?

புரட்டாசி சனியன்று "ஓம் நாராயணாய நம" என்ற எட்டெழுத்து மந்திரத்தைச்  சொல்லவேண்டும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.

அதாவது உலகத்தில்  வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூ லோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன்கள் (01.11.2025)!

செங்கல்பட்டு துளசீஸ்வரர்: துளசியால் அர்ச்சனை செய்யப்படும் அபூர்வ சிவலிங்கம்!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – மீனம்!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – கும்பம்!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – மகரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments