Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
Lord Perumal
, சனி, 15 அக்டோபர் 2022 (14:06 IST)
கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.


புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும். சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.

பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு. அதுவும்  புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த  மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில்  காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி  விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்கு பூஜை  செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஞ்சநேயர் பக்தர்களை சனி பகவான் தொந்தரவு செய்வதில்லை ஏன் தெரியுமா...?