Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூச்சு காற்றை வசப்படுத்தும்; பிராணாயாமம்

மூச்சு காற்றை வசப்படுத்தும்; பிராணாயாமம்
பிராணன் - இதயத்தின் அனைத்து பகுதிகளிலும்
அபானன் - வயிறு, புஜங்கள், பெரீனியம்
 
வியானன் - உடல் முழுவதும்
 
உதானன் - இதயம், தொண்டை, பிளேட் ஏரியா , தலை , கண்புருவம்
 
சமானன் - நேவல் (வயிறு)
 
கூர்மன் - கண் இமைகள்
 
தனஞ்செயன் - எலும்புகள் ,சதை , தோல், ரத்தம் , நரம்புகள் , உரோமம் கிருகரன் -வயிற்றின் சிறிது மேல்புறம்
 
நாகன் - வயிற்றின் சிறிது மேல்புறம்
 
தேவதத்தன் - தொண்டை, மூச்சுக்குழாய் மேல்புறம்
 
மூலாதாரம் - பூமி
 
சுவாதிஷ்டானம் - நீர்
 
மணிபூரகம் - நெருப்பு
 
அனாகதம் - காற்று
 
விசுத்தி - ஆகாயம்
 
மூலாதாரம் - குறி, குதம், தொப்புள் கீழ்ப்பகுதி முழுவதும்
 
சுவாதிஷ்டானம் - தொப்புள், வயிற்றின் கீழ்ப்புறம், சிறுகுடல், பெருகுடல்
 
மணிபூரகம் - மேல் வயிறு முழுதும், பித்தம், கணையம், இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள்
 
அனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை
 
விசுத்தி - மூச்சுக்குழல், தொண்டை முழுவதும்
 
ஆக்ஞை - கண், மூக்கு இரண்டின் நடுப்புறம், கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி. நெற்றி (நடு, மேல்) பிராணாயாமம் (யோகம்) என்பது பாரதத்தின் கிடைத்ததற்கரிய சொத்து. இங்கிருந்தே இக்கலை உலகம் முழுவதும் பரவியுள்ளது.
 
நாமே இறைவன் என்பதை கடுந்தவம் மூலம் உலகிற்கு உணர்த்தியது மட்டுமல்லாமல், வாழ்ந்து காட்டியும் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும்  என்ற எல்லையற்ற பெருங்கருணையால் மனித குலத்தை மேம்படுத்தவும் மனிதத்தின் மூலம் அனைத்து உயிரிகளையும் நேசித்து அவைகளையும் உயர்த்த வழி  கூறிய மஹா சித்த புருஷர்கள் வாழ்ந்த ஞான பூமி இது.
 
இந்த யோகக்கலை (யோக விஞ்ஞானம்)யை விண்ணவரும் மண்ணவரும் கற்றுத் தேர்ந்து இறைவனோடு இணையும் வித்தையை நமக்கு அளித்த மஹா புருஷர் ஞான சிம்மம்மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவர். அவர் ஒரு அவதார புருஷராகவும், வேத புருஷராகவும்,சித்த புருஷராகவும் விளங்குபவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாங்கல்ய பலத்திற்காக சொல்ல வேண்டிய மந்திரம்....!