திருப்பதி தேவஸ்தானம் நாட்டின் பல நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டி வந்தது.
இந்த நிலையில் இந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
ரூபாய் 30 கோடி செலவில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் 62 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்பதியில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் இந்த கோவிலில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வைஷ்ணவா தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குமாறு ஜம்மு அரசிடம் கேட்டுக் கொள்ளபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன