Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வ வளத்தை அள்ளித்தரும் குபேர மந்திரம் எது தெரியுமா...?

Advertiesment
Kuberan
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (11:39 IST)
செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் லட்சுமி குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர்.


தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை 'குபேர காலம்' என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.

மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு  அருளாசி வழங்குபவர். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான்.

குபேர மந்திரம்:

ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய
நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே
லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்  ஓம் குபேராய நமஹ!

குபேரன் தோன்றிய நாள்: வியாழக்கிழமை. ஜனன நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம். குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். பிடித்த நைவேத்தியம்: ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால், வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள். இந்தியாவில் குபேர விக்ரகம் உள்ள இடம்: நாசிக். தமிழகத்தில் குபேர விக்ரகம் உள்ள இடம்: மதுரையிலுள்ள திருமங்கலத்தில்தான் முனீஸ்வரர் கோயிலில் குபேர விக்ரகம் தனியாக உள்ளது.

தனிக்கோயில்: சென்னை அருகே,வண்டலூரில் இரத்தின மங்களத்தில் குபேரருக்கென்றே பிரத்தியேகமாக கோயில் அமைந்துள்ளது மேலும் பிள்ளையார் பட்டி அருகிலும் தனிக்கோவில் உள்ளது.

குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைப்பது சிறப்பு. குபேரரின் அருளால் தொழிலில் லாபமும், செல்வ வளமும் பெருகும். புதன்கிழமை சிறப்பானது. பச்சை நிறம், பாசிப்பயறு குபேரனுக்கு பிடித்தமானது.

Edited by Sasikala
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குருவாயூர் கோவிலின் சிறப்புகள் என்ன தெரியுமா...?