Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது தெரியுமா...?

Diwali
, திங்கள், 10 அக்டோபர் 2022 (16:31 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய தினத்தில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்வது அவசியம்.

கங்கா ஸ்நானம் : தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனை கங்கா ஸ்நானம் என்பார்கள். கங்கா ஸ்நானம் செய்த பின்னர் வாங்கிய புத்தாடைகளுக்கும், பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பூஜை செய்யும் இடத்தில் வைத்து வழிபடலாம்.

கிருஷ்ணர், மகாலட்சுமி, குபேரரின் படங்களை வைத்து அவற்றிற்குப் பூமாலை சாற்றவும். மண் அகல்விளக்கு நெய் தீபத்தை ஏற்றவும். சுவாமி படங்களுக்கு முன் 3 இலைகளைப் போட்டு நீங்கள் செய்த இனிப்பு பதார்த்தங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை சுவாமிக்கு படைக்கவும். புதிய ஆடைகளை அருகில் வைத்து பூஜை செய்யலாம். பொதுவாக இந்த பூஜை தீபம்+ஒளி = தீபாவளி என்பார்கள். அதனால் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல பல அகல் விளக்குகளை ஏற்றி மின் விளக்குகளை அனைத்து தீப ஒளியில் இறைவனை பிரார்த்திப்பது நல்லது.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரட்டாசி மாதத்தில் அதிக வழிபாடுகளை மேற்கொள்ள காரணம் என்ன...?