Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்னி நட்சத்திரத்தில் அண்ணாமலையாரை குளிர்விக்கும் அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு..!

Advertiesment
அக்னி நட்சத்திரம்

Mahendran

, செவ்வாய், 6 மே 2025 (18:21 IST)
தற்போது அக்னி நட்சத்திர காலம் தொடங்கி விட்டது. இந்த வெயில்  மே 28 வரை நீடிக்கும் என்ற நிலையில்  இந்த நாட்களில் சூரியன் மிக அதிக வெப்பத்தை தருவார். இந்த சூட்சும காலத்தில், நம்மை மட்டும் இல்லாமல், நம்மால் வழிபடும் தெய்வங்களுக்கும் "குளிர்ச்சி" தேவைப்படும் என்பதையே நம் முன்னோர்கள் உணர்ந்தனர்.
 
புராணக் கதையின் படி, ஆலகால விஷம் குடித்ததால் சிவபெருமான் உடலில் அதிக வெப்பம் எழுந்தது. இதனால் அவரை குளிர்ச்சிப்படுத்த, தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதுவே அவருக்குப் பிடித்த வழிபாடாக மாறியது.
 
இதில், ஒரு சிறிய துளையுள்ள பாத்திரம் சிவலிங்கம் மீது கட்டி, அதிலிருந்து சொட்டு சொட்டாக வாசனைத் திரவியங்கள் கலந்து நீர் விழச் செய்வார்கள். இதனால் சிவபெருமான் மனம் குளிர்ந்து, பக்தர்களுக்கு நல்ல பலன்கள் தருவார் என்பது நம்பிக்கை.
 
அந்த வகையில் அண்ணாமலையாருக்கு காலை முதல் சாயங்காலம் வரை தொடர்ந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் பெரிய அலங்காரங்கள் செய்யப்படுவதில்லை.
 
எந்தெந்த முறையில் அண்ணாமலையாரை குளிர்வித்தால் என்னென்ன பலன்கள்?
 
பசும்பால் – அனைத்து நன்மைகளும்
 
தயிர் – ஆரோக்கியம்
 
தேன் – தோல் நோய் தீர்வு
 
அருகம்புல் நீர் – இழந்ததை மீண்டும் பெறல்
 
சந்தன நீர் – பிள்ளைப் பாக்கியம்
 
இளநீர் – செல்வ வளம்
 
கரும்புச் சாறு – முக்தி
 
திராட்சை நீர் – வெற்றி
 
இந்த வெயிலில், நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டியது போலவே, சிவபெருமானையும் தாரா அபிஷேகத்தின் மூலம் குளிர்ச்சிப் படுத்தி நம்மை காத்தருள செய்வோம்!
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!