கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் இந்த நாளில் சூரசம்ஹார நாளில் விரதம் இருப்பது பெரும் பலனை கொடுக்கும்.
முருகபெருமான் கொடிய அரக்கனான சூரபத்மனை அழித்து குடிகளை காத்த நாள் சூரசம்ஹார நாள். சூரபத்மனை துவம்சம் செய்த முருகபெருமான் திருச்செந்தூரில் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார். அவ்வாறே வலக்கையில் தாமரை மலருடன் திருச்செந்தூரில் அருள்புரிகிறார்.
இந்த நன்னாளில் முருக பெருமானை வேண்டி விரதம் இருப்பது கிடைக்காத பலனையும் கிடைக்க செய்யும் வல்லமை வாய்ந்தது. சூரசம்ஹார நாளில் அதிகாலையே எழுந்து நீராடி முருகபெருமானுக்கு பூ வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அன்றைய நாள் காலை விரதம் இருந்து மதியம் முருக பெருமானுக்கு நிவேந்தங்கள் செய்து பின்னர் சாப்பிடலாம். அல்லது மாலை வரை விரதமிருந்து சூரசம்ஹார சமயத்தில் நிவேதனங்கள் செய்து வழிபடவும் செய்யலாம். விரத காலத்தில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் உள்ளிட்ட துதிகளை பாடுவது கூடுதல் சிறப்பை தரும்.
சிவபெருமானுக்கே வேத மந்திரம் அருளியவர் முருக பெருமான். அவரை வணங்குவதால் எதிர்படும் எதிரிகளை வெற்றிக் கொள்ள முடியும். எப்பேர்பட்ட நிறைவேறாத வேண்டுதலையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவர் சுப்பிரமணியர்.
நீண்ட கால குழந்தைபேறு இல்லாமை, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட சகலமும் இந்த நன்னாளில் மேற்கொள்ளும் விரதத்தின் மூலம் முருகன் முன்னால் எதிர்படும் எதிரிகள் அழிவது போல, பிரச்சினைகளும் அழிந்து நலவாழ்வு கிட்டும்.