அன்னபூரணி சிலையை பெரும்பாலும் அரிசிக்குள் வைக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில் அரிசிக்குள் அன்னபூரணி சிலையை வைக்கக்கூடாது என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
அன்னபூரணி சிலை ஏராளமானோர் வீடுகளில் உள்ளது என்பதும் பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை இந்த சிலை விற்பனையாகி வருகிறது என்பது தெரிந்ததே. அன்னபூரணி சிலையை ஒரு தட்டில் வைத்து சுற்றிலும் அரிசி தூவி வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் இது தவறான வழிபாடு என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
அன்னபூரணி சிலையை வைக்கும் தட்டில் சுத்தமான தண்ணீர் விட வேண்டும் என்றும் காலையும் மாலையும் தண்ணீரை மாற்ற வேண்டும் என்றும் தண்ணீர் விடுவதன் மூலம் அன்னபூரணி மனம் குளிர்ந்து மழை பெய்ய வைத்து ஊருக்கே அன்னம் கொடுப்பார் என்பதுதான் ஐதீகம் என்று கூறப்படுகிறது.
அரிசி பானைக்குள் அன்னபூரணி சிலையை வைத்தால் அரிசி குறையாமல் இருக்கும் என்பது மூடநம்பிக்கை என்றும் அரிசியில் அன்னபூரணி சிலையை வைக்கக்கூடாது என்றும் ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர்.