ஐப்பசி மாத பௌர்ணமி நேற்று இரவு தொடங்கி இன்று வரை இருக்கும் நிலையில், திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதாகவும், இதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் வலம் வர பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் மலையை கிரிவலம் சென்று வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிறப்பு அன்னாபிஷேகம் நடந்ததாகவும், இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை காத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று ஐதீகம் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த அபிஷேகத்தை பார்த்து வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.