Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(15.11.2024)!

Advertiesment
astro

Prasanth Karthick

, வெள்ளி, 15 நவம்பர் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 

 
மேஷம்
இன்று மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்
இன்று குடும்பத்தினரிடம் உங்களின் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபார விருத்திக்குண்டான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்
இன்று தடைகள் தகரும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து காரியங்களை கடை பிடித்து சாதித்து கொள்வீர்கள். உங்களுடைய சாதுர்யம் வெளிப்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்
இன்று உங்களை பார்த்தவுடன் அனைவரையும் முக வசீகரத்தால் கவர்ந்திழுப்பீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் விருப்பங்களும் தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை கேட்டு முடிவெடுப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக் காட்டி திருத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

 
கன்னி
இன்று சுதந்திரமாக பணியாற்றி வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்
இன்று அயல்நாடு சம்பந்தபட்ட செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்றுக் கொள்ள முயற்சிகள் எடுப்பீர்கள். இறை வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்
இன்று குறுக்கு வழியில் சென்று எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். உங்கள் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு
இன்று அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப்  பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்
இன்று மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்புடன் பழகுவார்கள். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்
இன்று உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமாகவே அமையும் - வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் போதும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்
இன்று ஓய்வின்றி உழைப்பீர்கள். ஆனாலும் உங்களின் கடன் பாக்கிகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டியது வரும். குடும்பத்தில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். உங்களுடைய புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீரங்கத்தில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்வு.. சொர்க்கவாசல் திறப்பு எப்போது?