Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடி 3வது சனிக்கிழமை.. குச்சனூரில் குவிந்த பக்தர்கள்..!

ஆடி 3வது சனிக்கிழமை.. குச்சனூரில் குவிந்த பக்தர்கள்..!

Mahendran

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (18:38 IST)
இன்று ஆடி சனிக்கிழமையை அடுத்து குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குவிந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி இந்த கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சனி தோஷம் நீங்குவதற்காக பரிகாரம் செய்ய பக்தர்கள் வருகை தருவதுண்டு.
 
குறிப்பாக ஆடி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று ஆடி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பதால் அதிகாலையிலேயே அதிக அளவு பக்தர்கள் வருகை தந்தனர். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(03.08.2024)!