Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரிமலையில் 10 நாட்கள் பங்குனி உத்தர திருவிழா

sabarimala
, திங்கள், 27 மார்ச் 2023 (21:48 IST)
கேரளாவில் உள்ள சபரிமலையில்   10 நாட்கள் பங்குனி உத்தர திருவிழா நடைபெறவுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்தர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்தர திருவிழா இன்று தொடங்கியது.

இதற்கு முன்ங்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்ட  நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

மேலும், இன்று அதிகாலையில் கோவில்  நடை திறக்கப்பட்டு, சிறப்பு  நடக்கப்பட்டது.

எனவே, காலையில் தந்திரி கண்டரரு ராஜிவரரூ, மேல் சாந்தி ஜெயராமன், நம்பூதரி, ஆகியோர் கொடிக்கு பூஜைகள் செய்தனர்.

இதையடுத்து பங்குனி உத்தர விழா கொடி ஏற்றப்பட்டது. இதில், மக்கள்  கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், 10 நாட்கள் சிறப்பு பூஜைகளும் திருவிழாவும் நடக்கவுள்ள நிலையில், நாளை முதல் கோவிலில் உற்சவ பலியும் நடகவுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி சரங்குத்தி பள்ளிவேட்டையும் நடக்கவுள்ளது. அதன்பின்னர், மறு நாள் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கவுள்ளது, ஆறாட்டு விழாவுக்குப் பின் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்விழாவுக்கு வருபவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்: ஒன்றரை மணி நேரத்தில் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை..!