Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு தேவையான புரோட்டீன் கிடைக்க என்ன செய்யவேண்டும்..?

Advertiesment
இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு தேவையான புரோட்டீன் கிடைக்க என்ன செய்யவேண்டும்..?
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.

பால்: காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர (தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை) சுருக்கங்கள் மறையும்.
 
ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர்- ஒரு தேக்கரண்டி, தேன்- ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் ஒரு சிறந்த ஆன்டி- ஏஜிங்காக செயல்படுகிறது.
 
முட்டை: முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.
 
தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.

இதனுடன். கஸ்தூரி மஞ்சள் தூள் 1 சிட்டிகை கலந்து கொள்ளலாம். குளிப்பதற்கு முன்பு முகத்துக்கு இந்த பேக் போட்டு. பத்து நிமிடம் கழித்து அலம்புங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வாருங்கள். கண்ணாடி பார்க்கும் போது அசந்து போவீர்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றாடம் உணவில் முக்கனிகளை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் !!