Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்றாடம் உணவில் முக்கனிகளை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
அன்றாடம் உணவில் முக்கனிகளை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் !!
வெவ்வேறு சுவை கொண்ட முக்கனிகளை கூட்டாகவும், தனித்தனியாகவும் உண்பது உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும்.

மாம்பழம் முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் தோலில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோய், கொலஸ்டிரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன், சிலவகை பழங்கள் புற்று நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
 
மாம்பழ தோலில் அடங்கியுள்ள இரும்புச் சத்து, ரத்த சோகைக்கு மருந்தாக பயன்படும். இதில், 'ரெஸ் வெராட்ரால்' என்னும் ரசாயனம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து, 'கொலஸ்டிரால்' பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
 
பலாப்பழம்: முக்கனியில் இரண்டாவது கனியான பலா, அனைவருக்கும் பிடித்தமானது. உடல் உஷ்ணத்தை குறைத்து, பித்த மயக்கம், தலை சுற்றல் ஆகியவற்றை குணமாக்கும். இதை, தேனில் ஊறவைத்து, உட்கொண்டால், மூளை நரம்புகள் வலுப்பெற்று, வாத நோய், சிந்தனை சிதறல் போன்ற பாதிப்புகள் குணமாகும். 
 
வாழைப்பழம்: வாழைப்பழம் இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. தினமும் வாழை இலையில் உணவு உட்கொண்டால், மேனி பளபளப்பாகும். மந்தம், உடலில் பலம் குறைவு, இளைப்பு போன்றவற்றை அகற்றி, பித்தத்தையும் தணிக்கும். 
 
தினமும் ஒரு வாழைப் பழத்தை ஏலக்காய் பொடியுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட, மூளையின் செயல் திறன் மேம்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சிக்கல்கள் சீராகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்பு! – இந்தியாவில் கொரொனா!