Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் குறிப்புகள் !!

Webdunia
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கபடுத்திக் கொள்ளுங்கள். தினமும் விடியற்காலையில் தண்ணீர்  குடிப்பதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.
 
ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற் குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.
 
இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி  மசாஜ் செய்யுங்கள். ஆன்டிக்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
தேன், எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் ஆகியவற்றை சேர்த்து கலவை செய்யுங்கள். இந்த பேஸ்டை உலர்ந்த சருமத்தில் தடவி, 10-15 நிமிடத்திற்குப்  பின்னர் கழுவவும். இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள மிகவும் சிறந்தது.
 
மஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள்  நீங்கிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments