Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய்கள் என்ன தெரியுமா...?

குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய்கள் என்ன தெரியுமா...?
குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை முக்கியம் தான் என்றாலும் கூட, மசாஜ் செய்வதற்காக பயன்படுத்தும் பொருட்களும் முக்கியமே. ஏதோ ஒரு எண்ணெய்யையோ அல்லது க்ரீமையோ உங்கள் குழந்தையின் சருமத்தில் பயன்படுத்த முடியாது. 

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதாலும் மிகவும் உணர்ச்சிக்கு உள்ளாகிற வகையில் இருப்பதாலும், குழந்தைக்கு மசாஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தும்  எண்ணெய் மீது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
 
தேங்காய் எண்ணெய்:
 
குழந்தையின் சருமத்திற்கும் இது மிகவும் நல்லதாகும்.மிதமான மற்றும் ஈரப்பதமான தட்ப வெப்ப நிலைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். 
 
ஆலிவ் எண்ணெய்:
 
குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தும் புகழ் பெற்ற எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெய்யும் ஒன்றாகும். குழந்தையின் சருமத்தில் சொறி, சிரங்கு, வெட்டு,  மற்றும் இதர அலர்ஜிகள் இல்லாமல் இருந்தால் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
 
கடுகு எண்ணெய்:
 
கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
 
நல்லெண்ணெய்:
 
நல்லெண்ணெய் குழந்தையின் மசாஜ் எண்ணெய்களில் ஒன்றாகும். இந்த எண்ணெய்யை குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று நிலவும் குளிர் காலத்தில்  பயன்படுத்துவது நல்லதாகும்.
 
பாதாம் எண்ணெய்:
 
பல்வேறு மசாஜ் எண்ணெய்களில் பாதாம் எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். இதில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளது. நறுமணமுள்ள எண்ணெய்யை விட தூய்மையான எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நலங்கு மாவின் அற்புதப் பலன்கள்