Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரியான முறையில் மேக்கப் போடுவதற்கு மற்றும் நீக்குவதற்கான டிப்ஸ் !!

சரியான முறையில் மேக்கப் போடுவதற்கு மற்றும் நீக்குவதற்கான டிப்ஸ் !!
ஏதாவது திருமணம், திருவிழா, பார்ட்டி என்று வந்தால் உடனே மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.

மேக்அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக்அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.
 
அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும்.
 
கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.
 
தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக்அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது.
 
மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக  கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.
 
இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக  கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய்கள் என்ன தெரியுமா...?