Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

Webdunia
கருவளையங்கள் இருப்பது தெரிந்ததும் நீங்களாகவே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி உபயோகிக்க வேண்டாம். ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து, இயற்கை அழகு சிகிச்சை முறை மற்றும் உணவு முறையின் மூலம் சரி செய்யலாம்.

கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர்  கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.
 
* 2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே  மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.
 
* பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெய்யும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம்  வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.
 
* முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
 
* உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments