Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாய்ப்புண் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Advertiesment
வாய்ப்புண் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
வாய்ப்புண் வருவதை கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் சிறிதளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
 
ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த  நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். 
 
வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில்  துர்நாற்ற்றம் ஏற்படும்.
 
ஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை  எடுத்துக்கொள்ளவேண்டும். 
 
பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா பயிற்சிகளை செய்யவேண்டும். நெல்லிக்காய் இலைகளை  வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க  புண் ஆறும்.
 
மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின அதாவது கொப்பரை தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன்கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூண்டு கலந்த பால் உடல் பருமனை குறைக்க உதவுமா...?